ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி
இன்று ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில், காவலர்களை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி மீது மோதியதால் 6 போலீஸார் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். இன்று ஜுன்ஜுனுவில் நடக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பேரணியில் விஐபி பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்பட்ட காவலர்கள், நாகூரில் இருந்து அந்த பேரணிக்கு செல்லும் வழியில் நடந்த விபத்தில் சிக்கி பலியாகினர். தேசிய நெடுஞ்சாலை NH 58 இல், சுரு மாவட்டத்தில் உள்ள பாக்சரா கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்தது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பாதை சரியாக தெரியததால் லாரி மீது காவல்துறையின் கார் நேருக்கு நேர் மோதியது.
5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
போலீசார் பயணித்த மஹிந்திரா சைலோ எக்ஸ்யூவி விபத்தில் சிக்கி நன்றாக சேதமடைந்தது. அந்த காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். காயமடைந்த ஒரு அதிகாரியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் இறந்த அதிகாரிகள் நாகூர் மாவட்டத்தில் உள்ள கின்வ்சர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ராம்சந்திரா (56), சுக்ராம் (38), கும்பரம் (35), தனராம் (33), (51) மற்றும் சுரேஷ் (35) மற்றும் மகேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் பயணித்த அதிகாரி சுகரம் கோஜா பலத்த காயம் அடைந்தார்.