இந்துக்களை பற்றி பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் மக்களவையில் கடும் விவாதம்
செய்தி முன்னோட்டம்
இன்று எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது முதல் உரையை மக்களவையில் ஆற்றிய போது "வன்முறை இந்துக்கள்" என்று அழைக்கப்படுபவர்களை குறிவைத்து பேசியதால் சூடான கருத்துப் பரிமாற்றங்களும் சலசலப்புகளும் இருந்தன.
ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் உடனடி பதில் பேசியதால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.
"பெரிய மனிதர்கள் அனைவரும் அகிம்சை பற்றியும் பயத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள்... ஆனால், தங்களை தாங்களே இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு, அசத்தியம் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். நீங்கள் எந்த வகையிலும் இந்து அல்ல" என்று ராகுல் காந்தி இன்று கூறினார்.
மேலும், ராகுல் காந்தி, சிவபெருமானின் படத்தை எடுத்து காட்டியதால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.
இந்தியா
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
இந்நிலையில், பிரதமர் மோடி எழுந்து, "ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று அழைப்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு" என்று கூறினார்.
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, நீட்-யுஜி தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன.
ஆனால், சபாநாயகர் அதை நிராகரித்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அந்த பிரச்சனை முடிந்து எம்பிக்கள் மீண்டும் மக்களவையில் கூடியதும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி கவலைகளை எழுப்பினார்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு தான் மற்ற பிரச்னைகளை எழுப்பலாம் என்று தெரிவித்துவிட்டார்.