Loading...
சுல்தான்பூர் நீதிமன்றத்திற்கு சென்றபோது ராகுல் காந்தி கான்வாய் விபத்து; பாதுகாப்பு நிலை என்ன?
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு கான்வாயில் திடீரென விபத்து ஏற்பட்டது

சுல்தான்பூர் நீதிமன்றத்திற்கு சென்றபோது ராகுல் காந்தி கான்வாய் விபத்து; பாதுகாப்பு நிலை என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 26, 2026
11:33 am

செய்தி முன்னோட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக லக்னோவிலிருந்து சென்று கொண்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு கான்வாயில் திடீரென விபத்து ஏற்பட்டது. பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கான்வாயின் முன்பகுதியில் சென்ற வாகனம் திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 5 கார்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் சேதமடைந்ததாகவும், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சிலர் லேசான காயமடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ராகுல் காந்தி

ராகுல் காந்தி முற்றிலும் பாதுகாப்பாக உள்ளார்

ராகுல் காந்தி பயணித்த கார் இந்த மோதலில் சிக்காமல் முன்னதாகச் சென்றதால், அவர் எந்தவித காயமுமின்றி முழுப் பாதுகாப்புடன் உள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து சிறிது நேர தாமதத்திற்கு பிறகு, ராகுல் காந்தியின் வாகனம் பாதுகாப்புப் படையினருடன் சுல்தான்பூரை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

2018 கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது அன்றைய பாஜக தலைவர் அமித் ஷா குறித்துப் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாக பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பைக் கேட்கவே ராகுல் காந்தி நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சுல்தான்பூர் எம்பி/எம்எல்ஏ சிறப்பு நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT