Page Loader
போர்ஷே விபத்து: புனேவை சேர்ந்த சிறுவன் 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை

போர்ஷே விபத்து: புனேவை சேர்ந்த சிறுவன் 25 வயது வரை வாகனம் ஓட்ட தடை

எழுதியவர் Sindhuja SM
May 22, 2024
10:04 am

செய்தி முன்னோட்டம்

புனேவில் தனது போர்ஷே காரை வைத்து 2 பேரை இடித்து கொன்ற 17 வயது சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும் என்று மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பீமன்வார் கூறியுள்ளார். மேலும், 1,758 கட்டணத்தை உரிமையாளர் செலுத்தாததால், அந்த சிறுவன் ஓட்டிய போர்ஷே டெய்கானின் நிரந்தரப் பதிவு மார்ச் மாதத்திலிருந்து நிலுவையில் உள்ளது என்று அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். புனேவின் கல்யாணி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விபத்தை ஏற்படுத்திய சொகுசு வாகனம் 12 மாதங்களுக்கு எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும்(ஆர்டிஓ) பதிவு செய்ய அனுமதிக்கப்படாது.

புனே 

நிரந்தர பதிவு இல்லாத வாகனத்தால் ஏற்பட்ட விபத்து 

மோட்டார் விதிகளின் கீழ், அந்த போர்ஷேவின் தற்போதைய தற்காலிக பதிவு ரத்து செய்யப்படும் என்றும் பீமன்வார் கூறியுள்ளார். "அந்த வாகனம் புனே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்(ஆர்டிஓ) ஒப்படைக்கப்பட்ட போது, ​​குறிப்பிட்ட பதிவுக் கட்டணம் செலுத்தப்படாதது கண்டறியப்பட்டது. மேலும் அந்த கட்டண தொகையை செலுத்துமாறு உரிமையாளரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். அந்த வாகனம் பெங்களூரைச் சேர்ந்த டீலர் ஒருவரால் இறக்குமதி செய்யப்பட்டதாகும். அதன் பின்னர் அது தற்காலிகப் பதிவில் புனேவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு நிரந்தர பதிவு செய்ய அந்த வாகனம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு வரப்படவில்லை. வாகனங்கள் தற்காலிக பதிவுக் காலத்தில் இருக்கும்போது, ​​அவற்றை ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லவும் அங்கிருந்து திரும்பவும் மட்டுமே பயன்படுத்த முடியும்.