பொதுத்துறை நிறுவனங்கள் வருவாய் ரூ.1.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு
தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் ரூ.93 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுத் தலைவர் ஏ.பி. நந்தகுமார் தெரிவித்தார். அவர் தலைமையில், ஒரு ஆய்வு குழு வேலூா் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்ய வந்தபோது அவர் இதனைத்தெரிவித்தார். ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், "வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகள் அனைத்தும் வேகமாகவும், தரமாகவும் நடைபெற்று வருவதாகக் கூறினார். கடந்த 2021-ஆம் ஆண்டில் 67 பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் ரூ.93 ஆயிரம் கோடியாக இருந்தது, இதனால் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இது ரூ.1.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது" எனத்தெரிவித்தார்.
வேலூரில் தொழில்நுட்ப பூங்கா
வேலூா் அப்துல்லாபுரத்தில் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் தாமதமடைந்ததால் புதிய ஒப்பந்தத்துடன் வேகமாக நடைபெறுவதாகவும், இந்த திட்டங்கள் 6 மாதங்களில் முடிவடைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். தகவல் தொழில் நிறுவனங்கள் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.