
தமிழ்நாட்டின் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ளும் நோக்கில் முன்கூட்டியே பொதுத்தேர்விற்கான அட்டவணை வெளியிடப்படும்.
அதன்படி, தமிழகத்தில் 10,11, மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணைகள் இன்று(நவ.,16)வெளியாகியுள்ளது.
இந்த அட்டவணையினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
மேலும், 10ம்.,வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் மே.,10ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் மே.,14ம்தேதியும், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.,6ம்தேதியும் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் 10ம் வகுப்பிற்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23-29ம் தேதி வரையும், 11ம் வகுப்பிற்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19-24ம் தேதி வரையும், 12ம் வகுப்பிற்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12-17ம் தேதி வரையும் நடக்கவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பொதுத்தேர்வு அட்டவணை
பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு !#PublicExams #TNEducation #TNGovernment #MinisterAnbilMahesh #KalaignarSeithigal pic.twitter.com/Jrj61363pG
— Kalaignar Seithigal (@Kalaignarnews) November 16, 2023