ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை
ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 -ஆம் தேதி, டெல்லியில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, உலக தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வரவுள்ளனர். இதனால், தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியே நடமாட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மேலும் ஒரு விதிமுறை அமலுக்கு வந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவும், சீனாவும் புறக்கணிக்கும் ஜி20?
ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி மாளிகைக்கு இன்று முதல் மாநாடு முடியும் வரை பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்து உள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதிக்கு பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டையொட்டி இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு தலைவர்கள், ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்கவிருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ரஷ்யா அதிபர் புட்டினும், சீனா அதிபர் ஜின்பிங்கும், மாநாட்டில் பங்கு கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக, புட்டினுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அவர் பங்கு பெறமாட்டார் என கூறப்படுகிறது. மாறாக ரஷ்யா சார்பாக, அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.