தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் இன்று பதவி ஏற்பு
நேற்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில், அவருக்கு பதிலாக, புதிய அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அவர் இன்று பதவி ஏற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த வழக்கறிஞரான பி.எஸ்.ராமன் ஏற்கெனவே திமுக ஆட்சி காலத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை வி.பி.ராமன்-உம் மூத்த வழக்கறிஞராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வி.பி.ராமன். அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டதிட்டங்களை வரையறுக்க உதவியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.