இன்று முதல் காந்தி குடும்பத்தில் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; பிரியங்கா காந்தி இன்று லோக்சபாவில் பதவியேற்கிறார்
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ராவின் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார். வயநாடு தொகுதியில் பெற்ற வெற்றியுடன், பல தசாப்தங்களில் முதல் முறையாக, நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகிய மூன்று உறுப்பினர்களும் இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்கள் 2024 உடன் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வயநாடு மக்களவைத் தொகுதியில் 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வயநாடு மக்களவைத் தொகுதியிலிருந்து பிரியங்கா காந்தியின் சகோதரர் ராகுல் காந்தி விலகிய பின்னர் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. ராகுல் காந்தி இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்- வயநாடு மற்றும் குடும்ப கோட்டையான ரேபரேலி தொகுதி.
பிரியங்கா காந்தியின் தேர்தல் அறிமுகம்
ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வேட்பாளராக வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். குறைந்த வாக்குப்பதிவு காரணமாக, பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகளை மட்டுமே பெற்றார். இது ஏப்ரல் மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் ராகு காந்தி பெற்ற 647,445 வாக்குகளை விடக் குறைவு. இருப்பினும், அவர் பெற்ற 410,931 வாக்குகள் அவரது முன்னிலை பெற்று தனது முதல் வெற்றியை பெற்றார். வயநாடு வெற்றி பிரியங்கா காந்தி வத்ராவின் தேர்தல் அறிமுகத்தைக் குறிக்கிறது. அவர் இப்போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் மக்களவையில் அமர்வார். இவர்களது தாயார் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.