
12வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார். முன்னதாக ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அங்கிருந்து செங்கோட்டைக்கு சென்றார். அவருடன் 9 இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் நான்கு இந்திய ராணுவ அதிகாரிகள் உடன் இருந்தனர். செங்கோட்டையில் கொடியேற்றியதன் மூலம், தொடர்ச்சியாக அதிகமுறை கொடியேற்றிய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 11 முறை தொடர்ச்சியாக இந்திரா காந்தி கொடியேற்றி இருந்த நிலையில், பிரதமர் மோடிக்கு இது 12வது முறையாகும். இந்த பட்டியலில் ஜவஹர்லால் நேரு 17 முறையுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi hoists the national flag at the Red Fort. #IndependenceDay
— ANI (@ANI) August 15, 2025
(Video Source: DD) pic.twitter.com/UnthwfL72O