குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சனிக்கிழமை (செப்டம்பர் 7) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விநாயகர் சதுர்த்திக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். கணபதி பாப்பா மோரியா!" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் விநாயக சதுர்த்தியின் புனிதமான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் மேலும், நாட்டின் பல பகுதிகளில் கூட்டுக் குதூகலத்துடன் கொண்டாடப்படும் இந்த விழா, சமூக ஆற்றலின் அழகிய உதாரணத்தை முன்வைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.