Page Loader
தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்
தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்

தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்

எழுதியவர் Nivetha P
Nov 21, 2023
01:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அனைத்தையும் வலுப்படுத்துவதற்கான 'பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்' தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதன்படி மத்திய அரசு 60%, மாநில அரசு 40% என்னும் பங்களிப்போடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தனி நபருக்கு புது தொழில் துவங்க, துவங்கிய தொழிலை விரிவாக்கம் செய்யவும், மேலும் சுய உதவி குழுக்கள் அமைக்க, கூட்டுறவு அமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளிட்டவைக்கு 10% பங்களிப்பு தொகை, 35% மானியம் என அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் சேர்த்து கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்தியா 

முதல்வரிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்ற அமைச்சர்கள் 

இதன்படி கடந்த 2020-21ம் ஆண்டின் முதல் நடப்பாண்டு வரையில் தமிழகத்தில் தனிநபர் பிரிவின்கீழ், 152.20 கோடி மானியத்துடன் 8,410 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் இம்மாதம் 3ம்.,தேதி துவங்கி 5ம்.,தேதி வரை உலகளவிலான உணவு திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் இறுதிநாளில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், சிறப்பாக செயல்பட்டு வரும் 5 மாநிலங்களுக்கு சிறப்பு செயல்திறனுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மாநிலமும் ஒன்றாகும். இவ்விருதினை இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கிய நிலையில், நேற்று(நவ.,20)தலைமை செயலகம் சென்ற அமைச்சர்கள் அன்பரசன், பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருதினை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.