
உங்கள் ஏரியாவில் நாளை (மே 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (மே 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
விழுப்புரம்: மதுரப்பாக்கம், சித்தாலம்பட்டு, கொடுக்கூர், விஸ்வரெட்டிபாளையம், செய்யத்து விண்ணன், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்க்குப்பம், குமுளம், பாகண்டை, முற்றம்பட்டு, நெற்குணம் (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை).
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி: ஸ்டாலின் நகர், பஞ்சாயத்து பதிவு அலுவலகம், செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, வடகம்பட்டி, வலையப்பட்டி, தேத்தூர், அதிகரம், ராமையாபுரி, பிடாரிப்பட்டி, ஆலம்பட்டி, உசிலம்பட்டி, களந்துப்பட்டி (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை).
ஈரோடு: மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம், சித்தோடு, ராயபாளையம், சுன்னாம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேராடு, மாமரத்துப்பாளையம் (காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை).