உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (மார்ச் 8) தமிழகத்தில் சில இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
சென்னை மேற்கு: கீழ்கொண்டையூர், அரக்கம் கிராமம், கர்லபாக்கம் கிராமம், தாமரைப்பாக்கம் கிராமம், கதவூர் கிராமம், வேளச்சேரி கிராமம், போண்டேஸ்வரம் கிராமம், கரனை கிராமம், புதுக்குப்பம் கிராமம். பால் பண்ணை சாலை, வேல் டெக் சாலை.
பராமரிப்பு
மின்வாரிய பராமரிப்பு பணிகள்
மேலே குறிப்பிட்ட பகுதிகள் அமைந்துள்ள அலமாதி துணைமின் நிலையத்தின் திறனை 2x10MVA இலிருந்து 3x10MVA ஆக அதிகரிப்பதன் மூலம் கூடுதலாக 10MVA சேர்க்கப்படும் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.
மேலும், 110/11KV மின்மாற்றியை நிறுவும் பணிகளும் நடைபெற உள்ளன.
இதையொட்டி குறிப்பிட்டுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.