உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை மெட்ரோ: புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை தெற்கு: மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாரணபுரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
நாமக்கல்: எஸ்.வாழவந்தியில் காலை 9-மாலை 5 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
பெரம்பலூர்: அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், சத்திரமனை, கண்ணபாடி, பேராலி, கல்பாடி, ஆசூர், கே.புதூர் பகுதிகளில் காலை 9-பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
திருப்பூர்: ஏரிபாளையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், அல்லம்பாளையம், புதுநல்லூர், சூரிபாளையம், சேரன்நகர், வெங்கிகல்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், கருவலூர், முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம், அரசபாளையம், நைனாம்பாளையம், ஆனந்தகிரி, மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், மணப்பாளையம், காரைக்கால்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம் பகுதிகளில் காலை 9-மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.