உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (பிப்ரவரி 8) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
சென்னை மேற்கு கோட்டத்தில் உள்ள மொகப்பேர் கிழக்கு 33/11 கிலோவாட் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கோல்டன் பிளாட்ஸ் ஃபீடரில் மொகப்பேர் சாலை, சத்யா நகர், கோல்டன் காலனி, வெஸ்டெண்ட் காலனி, கோல்டன் பிளாட், மதியழகன் நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஃபீடர் பராமரிப்புக்காக மின்தடை அமலில் இருக்கும்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை மேற்கு கோட்டத்தில் உள்ள ஜேஜே நகர் 33/11 கேவி கிலோவாட் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட 11 கேவி பன்யன் ஃபீடரில் மொகப்பேர் கிழக்கு ஏரி திட்டம், கங்கையம்மன் நகர், யூனியன் சாலை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
இதற்கிடையே, மற்றொரு செய்தியில், சமீபத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மின் மீட்டர்களை வாங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மின் மீட்டர் வாங்குவதற்காக இனி பொதுமக்கள் மின்சார வாரியத்திடம் விண்ணப்பித்து காத்திருக்காமல், நேரடியாக அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.