LOADING...
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை; புதிய அமைச்சர்களுக்கு பொறுப்புகள் அறிவிப்பு
தமிழக அரசில் பதவியேற்ற புதிய அமைச்சர்களுக்கு பொறுப்புகள் அறிவிப்பு

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை; புதிய அமைச்சர்களுக்கு பொறுப்புகள் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 29, 2024
08:16 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அமைச்சரவையில் புதிதாக பதவியேற்றவர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக அரசு சனிக்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்தது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட நிலையில், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. மேலும், செந்தில் பாலாஜி, கோவி செழியன், நாசர் மற்றும் ராஜேந்திரன் புதிய அமைச்சர்களான ஞாயிற்றுக்கிழமை ராஜ் பவனில் பதவியேற்றனர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்னர் அவர் வகித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், அமைச்சரே நாசருக்கு சிறுபான்மை நலத்துறை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறையும், ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

இலாகா ஒதுக்கீடு