NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு
    அமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகே கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டதாக புனே மருத்துவமனையின் டீன் கூறியுள்ளார்

    புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    11:03 am

    செய்தி முன்னோட்டம்

    புனே போர்ஷே கார் விபத்தை விசாரிக்கும் புனே காவல்துறை, 17 வயது சிறுவன் சம்பந்தப்பட்ட விபத்துக் காட்சியை, நவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரீதியில் ரீ-கிரியேட் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே, சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் அஜய் தாவேரே, மாநில மருத்துவக் கல்வி அமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகே கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டதாக புனே சசூன் பொது மருத்துவமனையின் டீன் கூறியுள்ளார்.

    டாக்டர் அஜய் தாவேரே, ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மருந்து வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், தடயவியல் மருத்துவத் துறையின் தலைவராக மந்திரியின் அறிவுறுத்தல் பேரிலேயே நியமிக்கப்பட்டார் என்று மருத்துவமனையின் டீன் விநாயக் காலே தெரிவித்தார்.

    குற்ற வழக்கு பின்னணி

    MLA மற்றும் அமைச்சரின் ஒப்புதல் பெற்று நியமனம்

    டாக்டர் தாவேரின் நியமனம், MLA சுனில் டிங்ரேவின் பரிந்துரைபேரில் அமைச்சர் ஹசன் முஷ்ரிப் செய்ததாக காலே கூறினார்.

    டிங்ரே மற்றும் முஷ்ரிப் இருவரும் ,முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் பிஜேபி-சிவசேனா கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்சிபியின் அஜித்பவார் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, சாஸூன் மருத்துவமனை, இரத்த மாதிரியை கையாள்வதில் குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் ஸ்ரீஹரி ஹல்னரை பணிநீக்கம் செய்தது.

    போலிஸாரின் கூற்றுப்படி, இளைஞரிடமிருந்து இரத்த மாதிரியை எடுத்த டாக்டர் ஹல்னர், டாக்டர் தவேரின் வழிகாட்டுதலின் பேரில் இரத்த மாதிரியை மாற்றியதை வெளிப்படுத்தினார்.

    மைனரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுவதற்கு முன்பு, இளைஞனின் தொழிலதிபர் தந்தை, வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்டைம் 14 அழைப்புகள் மூலம் டாக்டர் தாவேருடன் தொடர்பு கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விபத்து
    போர்ஷே
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்

    விபத்து

    காண்க: நைரோபி எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் பலி, 165 பேர் காயம் தீ விபத்து
    காஞ்சிபுரத்தில் ஒரு ஸ்கூட்டர் மீது மோதி அதை 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற BMW கார் காஞ்சிபுரம்
    மத்திய பிரதேச பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் பலி; 100 பேர் காயம் மத்திய பிரதேசம்
    ஊட்டியில் கட்டுமான பணி இடிபாடுகளில் சிக்கி 6 பெண்கள் உயிரிழப்பு  ஊட்டி

    போர்ஷே

    அப்டேட் செய்யப்பட்ட '2024 போர்ஷே கேயன்'.. என்னென்ன மாற்றங்கள்?  அமெரிக்கா
    இந்தியாவில் 'கேயன்' மற்றும் 'கேயன் கூப்' மாடல்களை வெளியிட்டது போர்ஷே கார்
    இந்தியாவில் தங்களுடைய விலையுயர்ந்த கார் மாடலை வெளியிட்டிருக்கும் போர்ஷே ஆட்டோமொபைல்
    ரூ.1.68 கோடி விலையில் இந்தியாவில் வெளியான அப்டேட் செய்யப்பட்ட போர்ஷே பனமேரா ஆட்டோமொபைல்

    காவல்துறை

    'பெண்களை கருவுற செய்தால் ரூ.13 லட்சம் வெல்லலாம்': க்ரியேட்டிவ்வாக மோசடி செய்த 8 பேர் கைது  பீகார்
    தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல் மகாராஷ்டிரா
    சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத சடலம் கண்டெடுப்பு சென்னை
    பட்டியலின பெண்ணை பீகார் காவலர் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரல்  பீகார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025