
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி, சிறையில் தற்கொலை முயற்சி
செய்தி முன்னோட்டம்
இந்த மாத துவக்கத்தில் புதுச்சேரியில் 9-வயது சிறுமி ஒருவர் மாயமானார். இரு தினங்களுக்கு பின்னர் அவர் ஒரு கலவையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன், கருணாஸ் என இருவர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையின் தனி செல்லில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான், விவேகானந்தன் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதனைப்பார்த்த சக கைதி, கருணாஸ் சத்தம் போட்டதும், சிறை வார்டன் ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றி எச்சரித்துள்ளார்.
இது குறித்து சிறை கண்காளிப்பாளர், விவேகானந்தன் தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்தது வருவதாக கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, விவேகானந்தன் காவல் துறையினரின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
குற்றவாளி தற்கொலை முயற்சி
சிறுமி கொலை வழக்கு - மிரட்டல் விடுக்கும் கைதி https://t.co/CnV8a4haau | #Pondicherry | #JusticeforArthi | #puducherry | #Criminal | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/jrQ2PKD6zW
— News7 Tamil (@news7tamil) March 11, 2024