புதுச்சேரியில் வெள்ள நிவாரணம் அறிவித்த முதல்வர் ரங்கசாமி; ரேஷன் கார்டுக்கு ரூ.5000 அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்ட பெரும் சேதத்தை எதிர்கொள்ளும் வகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5000 நிதி உதவியாக வழங்கப்படும். இந்த கனமழை மற்றும் வெள்ளத்தில் பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவியும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், மழையில் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ.40,000, ஆட்டுக்கு ரூ.20,000 வழங்கப்படும், விளை நிலத்திற்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.30,000 வழங்கப்படும். அதேபோல மீனவர்களின் படகு சேதம் அடைந்தால் ரூ.10,000, வீடு முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ரூ.20,000 வழங்குவதாக அறிவித்துள்ளார். பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருதி அரசு மிக அவசரமாக இந்த உதவிகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.