சினிமா பாணியில், எய்ம்ஸ் மருத்துவமனை வார்டுக்குள்ளேயே வாகனத்தை ஓட்டி வந்து கைது செய்த போலீசார்
இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்பது போன்ற மற்றொரு நிகழ்வில், செவிலியர் ஒருவரை கைது செய்வதற்காக செவ்வாயன்று, போலீஸ் வாகனத்தை எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஓட்டி சென்றனர் காவல்துறையினர். பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நர்சிங் அதிகாரி சதீஷ் குமார் என்பவரை கைது செய்ய இந்த சினிமா பாணி ஸ்டண்ட் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருபுறமும் நோயாளிகளின் படுக்கைகள் நிறைந்த ஒரு பரபரப்பான வார்டு வழியாக போலீஸ் வாகனம் ஸ்லோ மோஷனில் நகர்ந்து வந்த இந்த அசாதாரண முயற்சியின் வீடியோ வைரலாகி வருகிறது.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய செவிலியர் அதிகாரி
ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில், பயிற்சி பெண் டாக்டரை, செவிலியர் அதிகாரி குமார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. ரிஷிகேஷ் போலீஸ் அதிகாரி சங்கர் சிங் பிஷ்ட்டின் கூற்றுப்படி, குமார் பாதிக்கப்பட்டவருக்கு ஆபாசமான எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த கடுமையான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, குமார் மருத்துவமனையில் தனது பணிகளில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் மருத்துவமனையின் ஊழியர்களிடையே கோபத்தைத் தூண்டியது. அதன் தொடர்ச்சியாக அவர்கள் டீன் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர் மேலும் உள்ளூர் காவல்துறையை அணுகியதன் தொடர்ச்சியாக தான் இந்த கைது நடந்துள்ளது.
சினிமா பாணி எண்ட்ரி தந்த போலீஸ்
Uttarakhand Police entering AIIMS Rishikesh to arrest a nursing officer accused of molestation. pic.twitter.com/KD94jWBF68— Cow Momma (@Cow__Momma) May 23, 2024