Page Loader
காணொளி: வந்தாரா விலங்கு காப்பகத்தில் சிங்கக் குட்டிக்கு உணவளித்த பிரதமர் மோடி
சிங்கக் குட்டிக்கு உணவளித்த பிரதமர் மோடி

காணொளி: வந்தாரா விலங்கு காப்பகத்தில் சிங்கக் குட்டிக்கு உணவளித்த பிரதமர் மோடி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2025
01:46 pm

செய்தி முன்னோட்டம்

மூன்று நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை அனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவைப் பார்வையிட்டு திறந்து வைத்தார். வந்தாரா 2,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கும், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மீட்கப்பட்ட, அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகளுக்கும் தாயகமாகும். இது ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அதோடு இது ஒரு அதிநவீன விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமாகும். இந்த மையத்தை ஆனந்த் அம்பானி மேற்பார்வையிட்டு வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஆய்வு

வந்தராவில் உள்ள வன விலங்குகளுக்கான வசதிகளை ஆய்வு செய்த பிரதமர்

ஒரு காணொளியில், பிரதமர் அங்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான விலங்குகளுடன் நெருக்கமாகப் பழகுவதையும், அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதையும் காண முடிந்தது. அவர் ஒராங்குட்டான்கள், ஆசிய சிங்கக் குட்டிகள், வெள்ளை சிங்கக் குட்டி, மற்றும் அரிதான மற்றும் அழிந்து வரும் உயிரினமான மேகச் சிறுத்தை குட்டி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி உணவளிப்பதையும் காண முடிந்தது. வந்தாராவில் உள்ள மையத்தில் பல்வேறு வசதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். வந்தாராவில் உள்ள வனவிலங்கு மருத்துவமனைக்கும் அவர் விஜயம் செய்தார். அங்கு எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், ஐசியூக்கள் உள்ளிட்ட வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனைகள் மற்றும் வனவிலங்கு மயக்க மருந்து, இருதயவியல், சிறுநீரகவியல், எண்டோஸ்கோபி, பல் மருத்துவம், உள் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகள் அமைந்துள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post