திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய இன்று காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.
நேற்று தொடங்கிய கேலோ இந்தியா போட்டிகளை கொடியசைத்து துவங்கி வைப்பது உட்பட முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகத்தில் 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதற்காக, பிரதமர் மோடி, நேற்று மாலை 4 மணி அளவில் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, மாலை 4.55 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
இந்நிலையில், இன்று காலை ராஜ் பவனில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார்.
சவ்ல்க்ச
பிரதமரை வரவேற்க வழிநெடுக திரண்ட மக்கள்
திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொள்ளிடத்தில் உள்ள தற்காலிக ஹெலிபேட் சென்ற பின், அங்கிருந்து சாலை மார்கமாக பிரதமர் மோடி திருவரங்கம் சென்றார்.
இன்று காலை 11 மணியளவில் சாமி தரிசனம் செய்ய திருவரங்கம் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க வழிநெடுக திரண்ட மக்கள் மலர்தூவி அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்த பின், அங்கே நடைபெறும் கோயில் நிகழ்வுகளிலும் பிரதமர் கலந்து கொள்ள இருக்கிறார்.
திருச்சியில் சாமி தரிசனம் முடிந்ததும் அவர் ஹெலிகாப்டர் மூலமாக ராமேஸ்வரத்திற்கு பயணமாகிறார்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்ட பிறகு, இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.