கேரளாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிறார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
இந்திய பிரதமர் மோடி வரும் 24ம் தேதி கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்திற்கு வருகை தரவுள்ளார்.
வருகை தரும் மோடிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பினை அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
2 நாள் சுற்றுப்பயணமாக வரும் இவர் திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரயில் சேவையினை துவக்கி வைக்கவுள்ளார்.
அது தவிர வேறு சில நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
இதற்காக அவர் 24ம் தேதி மத்திய பிரதேஷ் மாநிலத்திலிருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு செல்கிறார்.
அன்று மாலை 5 மணிக்கு கொச்சி கப்பல் தளத்தில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து 6 மணிக்கு தேவார கல்லூரி மயானத்தில் நடைபெறும் பிஜேபி கட்சியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசுகிறார்.
கேரளா
உள்ளதாஜ்மலபார் என்னும் நட்சத்திர ஓட்டலில் தங்கவுள்ளார் மோடி
தொடர்ந்து அன்று இரவு உள்ளதாஜ்மலபார் என்னும் நட்சத்திர ஓட்டலில் தங்கவுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
அதன் பின்னர் 25ம் தேதி காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்று வந்தே பாரத் ரயிலினை தொடங்கி வைக்கிறார்.
இதனையடுத்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறார்.
அன்று மாலை 4 மணியளவில் பிஜேபி கட்சி தலைவர்களை சந்தித்து உரையாடவுள்ளார்.
அதன்பின்னர் இரவு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு விமானத்தில் டெல்லிக்கு செல்கிறார்.
இந்நிலையில் இவர் துவக்கி வைக்கவுள்ள இந்த வந்தே பாரத் ரயிலானது திருவனந்தபுரத்திலிருந்து கண்ணூர் வரை ஓடும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இந்த ரயில் சேவையானது காசர்கோடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.