Page Loader
குருவாயூரில் உள்ள கிருஷ்ணர்  கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு 

குருவாயூரில் உள்ள கிருஷ்ணர்  கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு 

எழுதியவர் Sindhuja SM
Jan 17, 2024
11:38 am

செய்தி முன்னோட்டம்

கேரளாவின் குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வழிபாடு செய்தார். பாரம்பரிய உடையான முண்டு மற்றும் வேஷ்டி அணிந்து கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். அதன்பிறகு, தனது உடையை மாற்றிக்கொண்டு நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த திருமணத்தின் போது தம்பதியினருக்கு பிரதமர் மோடி தான் மாலையை எடுத்து கொடுத்தார் என்று கூறப்படுகிறது. மம்முட்டி, மோகன்லால், திலீப் உள்ளிட்ட பல மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார்கள் அந்த திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி பேசினார் என்று அந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலேஜ்வ்

பிரதமர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு 

அந்த திருமணத்திற்கு முன்பு, கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி, இன்று காலை கோவிலில் திருமணம் செய்து கொண்ட அனைத்து தம்பதிகளுக்கும் இனிப்புகளை வழங்கி ஆசிர்வதித்தார். பிரதமர் வருகையை முன்னிட்டு அந்த கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 7.35 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் வந்தடைந்த பிரதமர் மோடி, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார். அங்கு நூற்றுக்கணக்கான பாஜக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் அவரை வரவேற்க திரண்டிருந்தனர். ஹெலிபேடில் இருந்து ஸ்ரீவல்சம் விருந்தினர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி, கோயிலுக்கு சென்று வழிபடுவதற்கு முன்பு கேரள பாரம்பரிய உடையை மாற்றிக்கொண்டார். அடுத்ததாக, அவர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திரிபிரயார் ஸ்ரீராம சுவாமி கோயிலில் பிரார்த்தனை செய்யவுள்ளார்.