LOADING...
பிரதமர் மோடியை சந்தித்தார் விண்வெளி நாயகன் சுபன்ஷு சுக்லா
விண்வெளி நாயகன் சுபன்ஷு சுக்லா பிரதமர் மோடியை சந்தித்தார்

பிரதமர் மோடியை சந்தித்தார் விண்வெளி நாயகன் சுபன்ஷு சுக்லா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 18, 2025
08:14 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். ஐஎஸ்எஸ்ஸிற்குச் சென்ற முதல் இந்தியரான சுபன்ஷு சுக்லாவை, பிரதமர் தனது இல்லத்தில் ஆரத்தழுவி வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, சுபன்ஷு சுக்லா தான் பயணித்த ஆக்சியோம்-4 திட்டத்தின் சின்னத்தை பிரதமரிடம் வழங்கியதுடன், விண்வெளி நிலையத்திலிருந்து பூமியைப் படம் பிடித்த புகைப்படங்களையும் பகிர்ந்துகொண்டார். ஜூன் 25 அன்று ஃபுளோரிடாவிலிருந்து புறப்பட்ட இந்தத் தனியார் விண்வெளித் திட்டத்தில், அவர் 18 நாட்கள் ஐஎஸ்எஸ்ஸில் தங்கியிருந்தார்.

சோதனை

விண்வெளியில் சோதனை

சுபன்ஷு சுக்லா, தனது சர்வதேச குழுவினருடன் இணைந்து 60க்கும் மேற்பட்ட சோதனைகளையும் 20க்கும் மேற்பட்ட விண்வெளிப் பயிற்சி அமர்வுகளையும் நடத்தினார். சமீபத்தில் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், தனது குழுவினரைப் பிரிவதில் வருத்தமும், நாடு திரும்புவதில் உற்சாகமும் கலந்த உணர்வுடன் இருப்பதாக சுபன்ஷு சுக்லா தெரிவித்திருந்தார். தனது அனுபவங்களை இந்திய மக்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலுடன் இருப்பதாகவும், தங்களுக்கு அளித்த பெரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சாதனை, சர்வதேச விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கிற்கு ஒரு முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.