Page Loader
ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த பிரதமர் மோடி 
ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த பிரதமர் மோடி 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 02, 2024
10:14 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மனைவி லதாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இரு தினங்களுக்கு முன் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இதய ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு இருதயத்தில் அறுவை சிகிச்சையற்ற முறையில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. அதன் பின்னர் ரஜினிகாந்த் குணமடைந்து வருவதாக மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது. மேலும் அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் அந்த அறிக்கை தெரிவித்தது. இதற்கிடையில், பிரதமர் மோடி ரஜினிகாந்த் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டுமென தொலைபேசி வாழ்த்து தெரிவித்தார். இதனை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post