LOADING...
உலகிலேயே இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்கள் பெற்ற முதல் அரசியல் தலைவர்; பிரதமர் மோடியின் சாதனை
பிரதமரின் பிரபலத்தன்மை, மற்ற முன்னணி உலகத் தலைவர்களை விட பல மடங்கு அதிகமாக உள்ளது

உலகிலேயே இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்கள் பெற்ற முதல் அரசியல் தலைவர்; பிரதமர் மோடியின் சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 26, 2026
09:18 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்களை கடந்த முதல் உலக தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 2014-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமரின் பிரபலத்தன்மை, மற்ற முன்னணி உலகத் தலைவர்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 43.2 மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ (15 மில்லியன்), பிரேசில் அதிபர் லூலா (14.4 மில்லியன்), துருக்கி அதிபர் எர்டோகன் (11.6 மில்லியன்) ஆகியோர் உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விருது

இஸ்ரேலில் உயரிய விருது

தற்போது இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு நாடாளுமன்றமான 'Knesset' உயரிய விருதான 'Speaker of the Knesset Medal' வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியா - இஸ்ரேல் இடையிலான உறவை வலுப்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடிக்கு அங்கிருந்த உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு அளித்தனர். தனது உரையில், "இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது" என்று குறிப்பிட்ட பிரதமர், பழங்கால வர்த்தகத் தொடர்புகள் மற்றும் கலாச்சார பிணைப்புகள் குறித்துப் பெருமிதத்துடன் பேசினார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement