Page Loader
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில் சென்ற பிரதமர் மோடி
பிரேசில் சென்ற பிரதமர் மோடி

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில் சென்ற பிரதமர் மோடி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2024
09:05 am

செய்தி முன்னோட்டம்

நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 19வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரை சென்றடைந்தார். பிரதமர் அங்கே உலகத் தலைவர்களுடன் அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான உச்சி மாநாடு குறித்து விவாதிப்பார் எனக்கூறப்படுகிறது. இது குறித்து தனது X பக்கத்தில் பிரதமர், "ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் தரையிறங்கினார். பல்வேறு உலகத் தலைவர்களுடனான உச்சிமாநாட்டின் ஆலோசனைகள் மற்றும் பயனுள்ள பேச்சுக்களை எதிர்பார்க்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பயணத்திட்டம்

பிரதமரின் ஐந்து நாள் பயணத்திட்டம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், முறையான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பிரதமர் மோடியின் மூன்று நாடுகளுக்கான பயணத்திட்டத்தில், அவரது பயணத்தின் இரண்டாவது கட்டம் இதுவாகும். முன்னதாக முதல் பயணமாக சனிக்கிழமை நைஜீரியாவிற்கு சென்ற ​​பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த தேசிய விருதான கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி நைஜர் விருது வழங்கப்பட்டது. பிரதமர் மோடி அடுத்ததாக கயானா செல்வார். 1968ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கயானாக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post