நைஜீரியாவில் இந்திய பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு; வரவேற்பில் கவனம் ஈர்த்த 'நகரத்தின் திறவுகோல்'
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கி ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவின் அபுஜா நகருக்கு சென்றடைந்தார்.
அவருக்கு நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபு அபுஜா தலைமையில் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முக்கியமான துறைகளில் மூலோபாய கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக அமைந்துள்ள இந்த பயணத்தின் முக்கியத்துவத்தை நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபு வலியுறுத்தினார்.
நைஜீரியாவின் பெடரல் கேபிடல் டெரிட்டரிக்கான மந்திரி நைசோம் எசென்வோ வைக் பிரதமர் மோடிக்கு அபுஜாவின் நகரத்தின் திறவுகோல் என்ற அடையாளத்துடன் கூடிய சாவியை வழங்கியது இந்த பயணத்தின் சிறப்பம்சமாக மாறியுள்ளது.
சாவி
சாவியின் சிறப்பம்சம் என்ன?
நைஜீரிய மக்களிடமிருந்து இந்தியா மற்றும் அதன் தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை, மரியாதை மற்றும் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த சாவி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் மிகவும் மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த முக்கிய அம்சம், இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகள் மற்றும் பரஸ்பர பாராட்டுகளை ஆழமாக்குவதைக் குறிக்கிறது.
இதற்கிடையே, நைஜீரியாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் நிகழ்வில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இந்தியக் கொடிகளை அசைத்து பாரத் மாதா கி ஜெய் போன்ற தேசபக்தி முழக்கங்களை முழங்கினர்.
அபுஜாவில் உள்ள இந்திய சமூகத்தினர் அளித்த உற்சாக வரவேற்பின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, சமூக ஊடகங்கள் மூலம் தனது நன்றியைத் தெரிவித்தார்.