
ஐபிஎல் டிக்கெட் வாங்க முடியவில்லை என சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள்!
செய்தி முன்னோட்டம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்க முடியவில்லை என மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டியின் மே 6 ஆம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விற்பனை நடைபெற்றது.
டிக்கெட் விலை ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் நடைப்பெற்றது.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவு முதலே டிக்கெட் வாங்க வரிசையில் நின்றுள்ளனர்.
தொடர்ந்து, கூட்ட நெரிசலில் டிக்கெட் பெற முடியவில்லை என மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு தனி வரிசை வேண்டும் என கூறிய நிலையில், டிக்கெட் பெற்றுத்தருவதாக போலீசார் கூறி சமரசம் செய்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
sunnewstamil: #JustIn | சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்க முடியாமல் தவிப்பதாக மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்!#SunNews | #Chepauk | #Chennai pic.twitter.com/6rrGvW1n0i
— Parundhu News (@Parundhu_News) May 3, 2023