NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜல்லிக்கட்டுக்கான அரங்கம் தயார்; கடைசி நிமிடத்தில் பீட்டா வைத்த செக்-மேட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜல்லிக்கட்டுக்கான அரங்கம் தயார்; கடைசி நிமிடத்தில் பீட்டா வைத்த செக்-மேட்
    ஜல்லிக்கட்டுக்கான அரங்கம் தயார்; கடைசி நிமிடத்தில் பீட்டா வைத்த செக்-மேட்

    ஜல்லிக்கட்டுக்கான அரங்கம் தயார்; கடைசி நிமிடத்தில் பீட்டா வைத்த செக்-மேட்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 08, 2024
    01:16 pm

    செய்தி முன்னோட்டம்

    உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த முகூர்த்தக்கால் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கிராம பொதுமக்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில்,ஜல்லிக்கட்டு போட்டியை காண, அலங்காநல்லூர் கீழக்கரையில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம், இந்த மாதம் 23 அல்லது 24-ஆம் தேதி திறக்கபட உள்ளதாகவும், அதனை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

    இந்த சூழலில், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு வழங்கிய அனுமதியை எதிர்த்து, பீட்டா அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    card 2

    ஜல்லிக்கட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என பீட்டா முறையீடு

    பீட்டா மேல்முறையீட்டில், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அதோடு, இவ்வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது பீட்டா.

    இதனைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டிற்கு எதிரான மனுக்களை பரிசீலித்து, பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

    ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இயற்கையான செயல் பண்புகளுக்கும், காளைகளின் குணங்களுக்கும் எதிரானது என பீட்டா அமைப்பு அந்த மனுவில் கூறியுள்ளது.

    மேலும், 2017 முதல் 2022 வரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்த்து சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் தவறிவிட்டது எனவும் பீட்டா தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜல்லிக்கட்டு
    மதுரை
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு மாவட்ட செய்திகள்
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  உச்ச நீதிமன்றம்

    மதுரை

    இயக்குனர் சசிக்குமார்- தமிழ் சினிமாவின் சைலன்ட் வின்னர் நடிகர்
    மதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு  எய்ம்ஸ்
    மதுரை-சென்னை இடையிலான வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றம் சென்னை
    முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் சென்னை

    உச்ச நீதிமன்றம்

    ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு  தமிழக அரசு
    நீதிபதிகளுக்கான நெறிமுறைக் குறியீட்டு விதிகளை வெளியிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அமெரிக்கா
    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன? இந்தியா
    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025