Page Loader
டெல்லி விமான நிலைய பயணிகள் DigiYatraவை பதிவிறக்கம் செய்யாமலேயே இனி பயன்படுத்தலாம் 
இது பயணிகளுக்கு சுமார் 15-25 நிமிட பயண நேரத்தை மிச்சப்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலைய பயணிகள் DigiYatraவை பதிவிறக்கம் செய்யாமலேயே இனி பயன்படுத்தலாம் 

எழுதியவர் Sindhuja SM
Jun 08, 2023
05:37 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், 'டிஜியாத்ரா' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யாமலேயே அதன் பலனை அனுபவித்து கொள்ளலாம். விமான நிலையத்தின் டெர்மினல்-3ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியை பயன்படுத்தி மூன்றே படிகளில் பயணிகளின் பெயரை டிஜியாத்ராவில் பதிவு செய்துவிட முடியும். பயணிகள் தங்களுடைய போர்டிங் பாஸ் மற்றும் முகத்தை ஸ்கேன் செய்து, பதிவு மேசைக்கு அருகில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்களிடம் அடையாளச் சான்றிதழை வழங்குவதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் வெற்றிகரமாகப் பதிவுசெய்தவுடன், பயணிகள், பாதுகாப்புச் சோதனைப் பகுதி மற்றும் போர்டிங் கேட்கள் உட்பட டெர்மினலில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தடை இல்லாமல் செல்லலாம்.

details

டெர்மினல் 3 மற்றும் டெர்மினல் 2இல் டிஜியாத்ரா வசதியை பயன்படுத்தலாம் 

'டிஜியாத்ரா' டிசம்பர் 1, 2022 இல் தொடங்கப்பட்டது. இது பயணிகளுக்கு சுமார் 15-25 நிமிட பயண நேரத்தை மிச்சப்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டிஜியாத்ராவை பயன்படுத்தும் பயணிகள் விரைவாக போர்டிங் கேட்களுக்கு செல்ல முடியும். அவர்களுக்கு தொந்தரவு இல்லாத பயணமும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பும் வழங்கப்படும். அவர்களுக்கு பிரத்யேக நுழைவு வாயில்கள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல், தொடர்பு இல்லாத அனுபவமும் உறுதியளிப்பட்டுள்ளது. தற்போது, ​​டிஜியாத்ரா வசதி IGI விமான நிலையத்தின் டெர்மினல் 3 மற்றும் டெர்மினல் 2 இன் அனைத்து வாயில்களிலும் கிடைக்கிறது. டிஜியாத்ரா மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தும் பயணிகள் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.