Page Loader
சென்னை மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் BMW கார் மோதியதில் கொல்லப்பட்ட ராபிடோ ஓட்டுநர்
BMW கார் மோதியதில் கொல்லப்பட்ட ராபிடோ ஓட்டுநர்

சென்னை மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் BMW கார் மோதியதில் கொல்லப்பட்ட ராபிடோ ஓட்டுநர்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 20, 2024
01:03 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் மதுரவாயல்- தாம்பரம் பைபாஸ் ரோட்டில், நேற்று இரவு அதிவேகமாக வந்த BMW சொகுசு கார் மோதியதில் ராபிடோ பைக் ஓட்டுநர் உயிரிழந்தார். இவர் தெலுங்கு ஊடகத்தில் வீடியோ பத்திரிகையாளராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. கார் மோதியதில் அவர் விபத்து நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டார். பாண்டி பஜாரைச் சேர்ந்த பிரதீப் குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் பகுதி நேரமாக ரேபிடோ ஓட்டுநராக பணிபுரிந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்ததையடுத்து காரை ஓட்டி வந்தவர் காரை விட்டுவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

விபத்து குறித்து விசாரணையை துவங்கிய போலீசார்

வாகனம் ஓன்று ரோட்டில் தனியாக கிடப்பதை பார்த்த வாகன ஓட்டிகள், விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சேதமடைந்த இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றனர். விபத்து நடந்த இடத்திலிருந்து 100 மீ தொலைவில், மேம்பாலத்தின் கீழே இருந்த ஒரு புதரில் குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட பின்னரே இவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டது. விபத்து நடந்த வேகத்தில், 100 மீ தொலைவில் குமார் தூக்கியெறிப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணையை துவக்கியுள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.