Page Loader
நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்
விசாரணைக்காக அவரை டெல்லி போலீஸ் அழைத்துள்ளது.

நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

எழுதியவர் Sindhuja SM
Dec 16, 2023
12:37 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் பிரச்சனை குறித்து விசாரித்து வரும் டெல்லி காவல்துறை பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவைக்குள் நுழைந்து புகை குண்டுகளை வீசியவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா மற்றும் அவரது உதவியாளரை டெல்லி காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது. பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், புகை குண்டுகளை வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜட்ட்வ்ன்

மக்களவை சபாநாயகரை சந்தித்த பாஜக எம்பி

அதே நேரத்தில், நாடாளுமன்றத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து, இரண்டு பேர் உள்ளே நுழைய முயன்ற நிலையில் அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், கர்நாடக பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, நாடாளுமன்றத்திற்குள் நுழைய அவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கியது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து சபாநாயகரிடம் பேசிய எம்பி பிரதாப் சிம்ஹா, நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மனோரஞ்சன் டி என்பவரின் தந்தை தனது தொகுதியான மைசூருவில் வசிப்பதாகவும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பார்வையிட அவர் அனுமதி சீட்டு கேட்டதாகவும் தெரிவித்திருந்தார். அது தவிர தனக்கு வேறு எந்த தகவலும் தெரியாது என்றும் எம்பி பிரதாப் சிம்ஹா, மக்களவை சபாநாயகரிடம் கூறி இருந்தார். இந்நிலையில், தற்போது விசாரணைக்காக அவரை டெல்லி போலீஸ் அழைத்துள்ளது.