பழனி முருகன் கோயில் - 75 பேர் அமர்ந்து செல்லும் ஏசி வசதியுடன் கூடிய மின் இழுவை ரயில் பெட்டி
செய்தி முன்னோட்டம்
திண்டுக்கல், பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் அறுபடை வீடுகளுள் 3ம் படைவீடாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்த மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் வசதிக்காக ரோப்-கார்கள், 2 இழுவை ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் நவீன வசதிகள் கொண்ட 3ம்இழுவை ரயிலுக்கான 2 பெட்டிகள் கடந்த ஜனவரியில் வாங்கப்பட்டு அதனை தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் நடந்து வந்தது.
இதனிடையே 2 நாட்களுக்கு முன்னர் சென்னை ஐஐடி.,யிலிருந்து வல்லுநர்குழு அங்குச்சென்று ரயில் இழுவைப்பெட்டிகள், தண்டவாளம் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்துள்ளனர்.
3 டன் பஞ்சாமிர்தப்பெட்டிகள் வைக்கப்பட்டு சோதனையோட்டமும் செய்யப்பட்டுள்ளது.
எனினும், மேலும் 3 டன் பஞ்சாமிர்தப்பெட்டிகள் வைத்து சோதனையோட்டம் மேற்கொண்ட பின்னரே இந்த 3ம் ரயில் இழுவைப்பெட்டிகள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
ஏசி வசதியுடன் கூடிய மின் இழுவை ரயில் பெட்டி
#Watch | பழனி முருகன் கோயிலில், மின் இழுவை ரயில் நிலையத்தில் புதிய பெட்டி பொருத்தும் பணிகள் முடிந்த நிலையில், இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது!
— Sun News (@sunnewstamil) August 29, 2023
ஏற்கனவே, ஒரே நேரத்தில் 30 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில், மின் இழுவை ரயிலில் பெட்டிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக 75… pic.twitter.com/Rf48Ojawvv