Page Loader
பழனி முருகன் கோயில் நேர்த்திக்கடன் - முதுகில் அலகு குத்தி காரை இழுத்து சென்ற பக்தர்
பழனி முருகன் கோயில் நேர்த்திக்கடன் - முதுகில் அலகு குத்தி காரை இழுத்து சென்ற பக்தர்

பழனி முருகன் கோயில் நேர்த்திக்கடன் - முதுகில் அலகு குத்தி காரை இழுத்து சென்ற பக்தர்

எழுதியவர் Nivetha P
Aug 23, 2023
01:27 pm

செய்தி முன்னோட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பழனி முருகன் கோயில். இங்கு தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். அதேபோல் இங்கு வரும் பக்தர்கள் காவடி எடுப்பது, பால் குடம் எடுப்பது, அலகு குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவர். குறிப்பாக அலகு குத்தும் நேர்த்திக்கடன் பல முறைகளில் செய்யப்படும். உடல் முழுவதும் அலகு குத்தி நடந்து வருவது, அலகுக்குத்தி ஆகாயத்தில் பறந்தவாறு வருவது உள்ளிட்ட வகைகளில் அலகு குத்துவர். திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதுபோன்று பல வகையில் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவதினை காணமுடியும்.

நேர்த்திக்கடன் 

மேளத்தாளம் முழங்க நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர் 

இதனிடையே திருப்பூர் நத்தக்காடையூர் அருகேயுள்ள கிராமப்பகுதியினை சேர்ந்த கருப்பண்ணன் என்னும் முருக பக்தர் உலக மக்களின் நலன் வேண்டி அண்மையில் நேர்த்திக்கடன் ஒன்றினை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அது எப்படியெனில், கருப்பண்ணன் சண்முகாநதியில் நீராடிய பின்னர் தனது முதுகில் அலகு குத்தி அதன் மறுமுனையினை கயிறு கொண்டு மாருதி காரில் கட்டி அதனை இழுத்தப்படி கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இவருடன் வந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பக்தி பாடல்களை பாடியவாறு உடன் நடந்து சென்றுள்ளனர். மேளத்தாளம் முழங்க இவர் காரை அலகு குத்தியவாறு இழுத்து சென்றதை அங்கிருந்த பக்தர்கள் பலரும் கண்டு பரவச நிலையினை அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.