NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான் DGMO; வெளியுறவு செயலாளர் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான் DGMO; வெளியுறவு செயலாளர் தகவல்
    இந்திய ராணுவ இயக்குனர் ஜெனரலுக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான்

    இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான் DGMO; வெளியுறவு செயலாளர் தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 10, 2025
    06:31 pm

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமை இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல் (DGMO) இடையேயான உயர்மட்ட அழைப்பைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

    நிலம், வான் மற்றும் கடல் வழியாக போர் நிறுத்தம் மாலை 5:00 மணி முதல் அமலுக்கு வரும் என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டார்.

    மேலும், மே 12 ஆம் தேதி DGMO களுக்கு இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    "பாகிஸ்தானின் DGMO இந்திய DGMO-வை மதியம் 15:35 மணிக்கு அழைத்தார், மேலும் இரு தரப்பினரும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

    இதை செயல்படுத்த ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன." என்று மிஸ்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    "Pakistan's DGMO called Indian DGMO at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land, in the air & sea with effect from 1700 hours IST. Instructions have been given on both sides to give effect to… https://t.co/rEhleUtOXq pic.twitter.com/zUhZ3X0R0g

    — ANI (@ANI) May 10, 2025

    அமெரிக்கா

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

    முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தின் பதிவில் இருதரப்பும் அமைதிக்கு ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

    "அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நீண்ட இரவு நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். உங்களை வரவேற்கிறோம்!" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானின் துணைப் பிரதமர் இஷாக் டாரும் எக்ஸ் தளத்தில் போர் நிறுத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    போர்

    சமீபத்திய

    இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான் DGMO; வெளியுறவு செயலாளர் தகவல் இந்தியா
    உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு டொனால்ட் டிரம்ப்
    எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம் என தகவல் இந்தியா
    போர் மூண்டால் எப்படி அதிகாரப்பூர்வமாக இந்தியா அறிவிக்கும்? கடந்த கால வரலாறும், தற்போதைய சூழலும் போர்

    இந்தியா

    பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி இந்திய ராணுவம்
    இனி எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் வயர்லெஸ் சார்ஜிங்; புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியது இந்தியா எலக்ட்ரிக் வாகனங்கள்
    காணக் கிடைக்காத அரிய நிகழ்வு; கடைக்குள் சிவலிங்கத்துடன் காட்சி தந்த மலைப்பாம்பு ஆன்மீகம்
    பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீரென போன் போட்ட பிரேசில் அதிபர்; ஆபரேஷன் சிந்தூருக்கு பாராட்டு பிரேசில்

    பாகிஸ்தான்

    இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்கிறதா சவுதி அரேபியா? வெளியுறவு அமைச்சர் திடீர் வருகையின் பின்னணி என்ன? இந்தியா
    பாகிஸ்தானின் வான்வழி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த இந்தியா இந்தியா
     S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது? ஏவுகணை தாக்குதல்
    எல்லா பக்கமும் அடி; 2008க்கு பிறகு மோசமான சரிவை சந்தித்த பாகிஸ்தான் பங்குச் சந்தை பங்குச் சந்தை

    போர்

    முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா போர் நிறுத்தம் கோரும் ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது  ஐநா சபை
    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை ஜோ பைடன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025