இன்று முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் இயக்கினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இன்றுமுதல் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஆல் இந்தியா பெர்மிட் பெற்று இயங்கும் பல ஆம்னி பேருந்துகள் வழக்கமான பயணியர் பேருந்து போல் தினந்தோறும் இயக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, AITP பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்ய போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. இன்னும் 547 பேருந்துகள் பதிவெண்ணை மாற்றாததால், அவை இன்று முதல் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.