
தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி
செய்தி முன்னோட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்ட வீரர் சங்கரயாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க கூடாது என்று மறுத்துள்ளார்.
இதற்கு பலதரப்பட்ட எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை(நவ.,2) நடைபெறவுள்ள நிலையில், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை புறக்கணிக்க போவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதனை இன்று(நவ.,1) சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து அறிவித்துள்ளார்.
மேலும் அவர், 'தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இத்தகைய மோசமான ஆளுநர் இருந்ததே இல்லை' என்றும்,
'இவருக்கு சுதந்திர போராட்ட வீரர் சங்கரையா பற்றி தெரிந்திருக்கவில்லை என்றால், யாரிடமாவது கேட்டு தெரிந்திருக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.
போராட்டம்
'பொய் பேசுவதை தொழிலாக வைத்துள்ள ஆளுநர்' - அமைச்சர் சாடி பேசியுள்ளார்
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறும் ஆளுநர், சங்கரயாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க என்ன காரணம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, 'இதனால் நாளை நடக்கவுள்ள மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கவுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'பொய் பேசுவதை தொழிலாக வைத்துள்ள ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. தமிழ்நாடு அமைச்சரவை சொல்வதை செய்வது தான் ஆளுநரின் முக்கிய வேலை' என்று பேசியுள்ளார்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு ஆளுநர் ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்றும் அமைச்சர் கூறியதாக தெரிகிறது.
மாநில அரசு உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
அமைச்சரின் ஆதங்கம்
#NewsUpdate | "நாளை மதுரையில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை. அதை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளேன்" -பொன்முடி, உயர் கல்வித்துறை அமைச்சர்#SunNews | #RNRavi | #KPonmudy pic.twitter.com/gTvvBAzRCh
— Sun News (@sunnewstamil) November 1, 2023