சுற்றுலாவாசிகள் கவனத்திற்கு, ஊட்டியில் பிரபல தொட்டபெட்டா காட்சி முனை 3 நாட்களுக்கு மூடப்படுகிறது
தொடர் மழை காரணமாக ஊட்டி மலை தொடரில் உள்ள குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. மலைப்பாதை முழுவதும் ராட்சச மரங்கள், பெரிய பாறைகள் உருண்டு விழுந்து சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது நெடுஞ்சாலைத்துறை. இந்த நிலையில் தான் அந்த சாலை வழியாக செல்லும், தோட்டபெட்டா வ்யூ பாயிண்ட் சுற்றுலாவாசிகளுக்கு மூடப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. தொட்டபெட்டா சாலையில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தினசரி போக்குவரத்தி அபாயகரமாக தோன்றுவதால், இது மீட்பு பணிகளுக்கு இடையூறாக அமையும் என்பதாலும் இந்த தடை என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தடை 3 நாட்களுக்கு மட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.