
'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான கிருஷ்ணா நதிநீர் தகராறு தீர்ப்பாயத்தின் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்ததையொட்டி விவசாயிகள் மாநாட்டை பாஜக ஏற்பாடு செய்தது.
ஹைதராபாத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த இந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் சவுத்ரி, இதை தெரிவித்திருக்கிறார்.
ஹைதராபாத்தில் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் "மொழி" பற்றி குறிப்பிட்டு பேசிய அவர், வருங்காலத்தில் தேசியவாத சிந்தனை கொண்ட அரசாங்கம் தெலுங்கானாவில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
சன்ஜஸ்ல்க்
'பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்': அமைச்சர் சவுத்ரி
"இந்தியாவில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட மாட்டோம் என்று கூறுபவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள். நீங்கள் இந்தியாவில் வாழ விரும்பினால், 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், "இந்தியாவில் வசிக்கும் நீங்கள், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று சொல்வீர்களா?" என்று கேள்வி எழுப்பிய அவர், "அதனால்தான் சொல்கிறேன், 'பாரத் மாதா கி ஜே' என்று சொல்லாதவர்கள், இந்துஸ்தான் மற்றும் பாரதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள். இங்கே அவர்களுக்கு இடமில்லை." என்று தெரிவித்துள்ளார்.
மாநிலங்களில் தேசியவாத சித்தாந்தம் வளர்வது நாட்டிற்கு அவசியம். கூட்டு முயற்சிகளால் நாட்டை பலப்படுத்த வேண்டும் என்று மேலும் அவர் கூறியுள்ளார்.