ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கருத்துக்களை பகிர மின்னஞ்சல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரு தேர்தல் என்பது, மக்களவைக்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தேர்வு செய்வது. இதனால், தேர்தல் செலவு குறையும் என்பது மத்திய அரசின் கருத்து. இந்த நடைமுறை 1968 ஆண்டு முன்பு வரை இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர், சில காரணங்களால், இடைத்தேர்தல், மாநில அரசு பெரும்பான்மையை இழந்தது மற்றும் எமெர்ஜென்சி போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு சில மாநிலங்களில் தனித்தனி தேர்தல் நடைபெறவே, ஒரே தேர்தல் வழக்கம் மாறியது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குரல்களை தாண்டி, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை நடைமுறைப்படுத்த, இந்த ஆண்டே, முதல் படியை எடுக்கப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சத்திய கூறுகளை ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இருக்க, உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்
சோதனை ஓட்டமாக, இந்த 2024ஆம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலின் போதே, ஒரு சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலை இணைந்து நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அப்படி ஒரு வேளை இந்த சோதனையோட்டம் வெற்றி பெற்றால், இன்னும் 10 -15 ஆண்டுகளில் சுமுகமாக ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்திவிடலாம். இந்த நிலையில் தான், இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை ஜனவரி 15க்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனைகளை பொதுமக்கள் கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். https://onoe.gov.in மற்றும் sc-hic@ gov.in .