ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்; குளிர்கால கூட்டத்தொடரில் பில் நிறைவேற்றப்படும்
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு படியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான மசோதா, வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கை மத்திய அமைச்சரவையின் முன் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டது. முன்னதாக சென்ற வாரம்,"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என குறிப்பிடப்படும் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது என்ற கருத்து, தற்போதைய நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Twitter Post
இந்த ஆட்சிக்காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது என மோடி அரசு உறுதி
2014ல் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பிரதமர் நரேந்திர மோடியால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்ற கருத்து முன்னிலைப்படுத்தப்பட்டது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டு ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான சாத்தியக்கூறுகளையும், சாதக பாதகங்களையும் ஆய்வு செய்தது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் பரிந்துரைத்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் இந்த திட்டத்தின் மீது தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் இந்த முடிவுக்கு பங்களிக்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
சட்ட ஆணையத்தின் பரிந்துரை
தனித்தனியாக, லோக்சபா, மாநில சட்டசபைகள் மற்றும் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு - 2029 முதல், மூன்று அடுக்கு அரசாங்கங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவும், தொங்கு பாராளுமன்றம் அல்லது நம்பிக்கையில்லா வழக்குகளில் ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஏற்பாடு செய்யவும் சட்ட ஆணையம் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. எனினும் கோவிந்த் குழு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான எந்த காலத்தையும் குறிப்பிடவில்லை. குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்காக 'செயல்படுத்தும் குழு' ஒன்றை உருவாக்க முன்மொழிந்துள்ளது. குழு, 18 அரசியலமைப்பு திருத்தங்களை பரிந்துரைத்தது, அவற்றில் பெரும்பாலானவை மாநில சட்டசபைகளின் ஒப்புதல் தேவைபடாதது. இருப்பினும், இதற்கு சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் தேவைப்படும், அவை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட வேண்டும்.