'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி
ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, ராஜஸ்தான் டிஜிபி உமேஷ் மிஸ்ரா சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளார். காவல்துறையினர் இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக, ரோஹித் ரத்தோர் மக்ரானா மற்றும் நிதின் ஃபௌஜி ஆகியோரை சந்தேகிக்கின்றனர். மேலும் காவல்துறையினர் அவர்கள் மீது தலா ₹5 லட்சம் சன்மானமாக அறிவித்துள்ளனர். "நவம்பர் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு காரை ரிப்பேர் செய்வதற்காக என் மகன் மகேந்திரகர் சென்றான். அதன்பிறகு அவனுடன் எந்த தொடர்பும் இல்லை," என்று நிதின் ஃபௌஜி தந்தை பிடிஐயிடம் கூறினார்.
ராணுவத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள நிதின் ஃபௌஜி
மேலும் பிடிஐ செய்தி நிறுவனம் குற்றம்சாட்டப்பட்ட நித்தினின் நண்பரான தீபக்கிடமும் இதுகுறித்து பேசியுள்ளது. "நிதின் என் வகுப்பில் படித்து வந்தான். நன்றாக படித்து வந்த அவன், பின்னர் ராணுவத்தில் சேர முடிவு செய்தான்." "அவர் தனது உடல் தேர்வுக்குத் தயாராகி பின்னர் ராணுவத்தில் சேர்ந்தான். அவரை மூளைச் சலவை செய்தது யார் என்று எனக்குத் தெரியவில்லை, திடீரென அவன் பெயர் செய்திகளில் அடிபடுகிறது" என தீபக் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுக்தேவ் சிங் கோகமேடியின் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜெய்ப்பூர் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வன்முறை வெடித்தது. ராஜ்புத் தலைவர் ராஜ் ஷெகாவத், "துப்பாக்கி குண்டுகளுக்கு, துப்பாக்கி குண்டுகள் மட்டுமே பதிலளிக்கும்" எனவும், அவரை கொன்றவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கோகமேடி கொலைக்கு ரோஹித் கோதாரா கும்பல் பொறுப்பேற்பு
ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி, அவர் வீட்டில் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இருவரில் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது அவரை கொல்ல வந்த கொலையாளிகள், "அவரிடம் ஏதோ விவாதிப்பது போன்று அங்கு வந்திருந்தனர். இந்த சம்பவத்தில் சுக்தேவ் சிங் கோகமேடி மற்றும் அவரது பாதுகாவலர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்." "கொலையாளிகளுடன் வந்த ஒரு குற்றவாளியும் சுட்டுக் கொல்லப்பட்டார், அவர் இறந்தார். மர்ம நபர்களின் மறைவிடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது." "நாங்கள் ஹரியானா டிஜியிடம் பேசினோம், உதவி கோரப்பட்டுள்ளது. கொலைக்கு ரோஹித் கோதாரா கும்பல் பொறுப்பேற்றுள்ளது; விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என அம்மாநில டிஜிபி தெரிவித்தார்.