Page Loader
இறக்கும் தருவாயிலும் பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்- ஒடிசாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம் 
மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஓட்டுநர் ஒட்டி வந்த பேருந்து.

இறக்கும் தருவாயிலும் பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்- ஒடிசாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம் 

எழுதியவர் Srinath r
Oct 29, 2023
11:27 am

செய்தி முன்னோட்டம்

ஒடிசாவில் ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரின் சாமர்த்திய செயல்பாட்டால் பேருந்தில் பயணித்த 48 நபர்களும் அதிர்ஷ்டவசமாக உயர்த்தினார். கந்தமால் மாவட்டத்தில் உள்ள பாபுரி கிராமத்தின் அருகே கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சம்பவத்தில், மா லக்ஷ்மி என்ற தனியார் பேருந்தை ஓட்டுனரான சனா பிரதான் ஓட்டிச்சென்றுள்ளார். பேருந்து ஓட்டும் போது திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, தன்னால் மேலும் வண்டியை இயக்க முடியாது என உணர்ந்தவர், பேருந்தை ஒரு சுவரின் மீது மோதி பாதுகாப்பாக நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பின் சனா பிரதான் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

தான் இறந்தும் பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர்