Loading...
NEET-UG இனி கணினி வழித் தேர்வாக மாற்றம்? NTA இயக்குனர் அபிஷேக் சிங் முக்கிய அறிவிப்பு
NEET-UG, கணினி வழி தேர்வாக விரைவில் மாற்றப்படவுள்ளதாக NTA தெரிவித்துள்ளது

NEET-UG இனி கணினி வழித் தேர்வாக மாற்றம்? NTA இயக்குனர் அபிஷேக் சிங் முக்கிய அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 14, 2026
07:59 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ நுழைவு தேர்வான NEET-UG, பாரம்பரிய OMR Sheet முறையிலிருந்து கணினி வழி தேர்வாக விரைவில் மாற்றப்படவுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை (NTA) தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய NTA தலைமை இயக்குனர் அபிஷேக் சிங், "கணினி வழித் தேர்வே எதிர்காலம். NTA நடத்தும் JEE Main, CUET, UGC-NET போன்ற அனைத்து முக்கியத் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் நிலையில், நீட் தேர்வும் விரைவில் கணினி முறைக்கு மாற்றப்படும்" என உறுதிப்படுத்தியுள்ளார்.

பரிந்துரை

நந்தன் நிலேகணி தலைமையிலான உயர்மட்டக் குழு

தேர்வு முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையிலான உயர் மட்ட பணிக்குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் தேர்வு எழுத உள்ளதால், மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள்:

நாடு முழுவதும் சான்றளிக்கப்பட்ட கணினி தேர்வு மையங்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பது.

சர்வர் கோளாறுகள் மற்றும் தரவு கசிவுகளைத் தவிர்க்க அதிநவீன டிஜிட்டல் பாதுகாப்பு வளையங்களை அமைப்பது.

முறைகேடுகளைத் தடுக்க தேர்வு மையங்களில் AI மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் தொழில்நுடப்பங்களை பயன்படுத்துவது.

விவரங்கள்

மாற்றத்திற்கான முக்கியக் காரணம்

கடந்த காலங்களில் வினாத்தாள் கசிவு மற்றும் OMR தாள்கள் மதிப்பீட்டில் எழுந்த பல்வேறு சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் விமர்சனங்களை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காகித வினாத்தாள்களைக் கொண்டு செல்வதில் உள்ள ஆபத்துகளை நீக்கி, தேர்வின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இம்மாற்றம் எப்போது முதல் அமலுக்கு வரும் என்ற துல்லியமான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தியடைந்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT