Page Loader
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்: இணையதளம் மூலம்  பஸ் பாஸ் பெறும் வசதி அறிமுகம்
கட்டணமில்லா பேருந்து பயணசீட்டினை இணையதளம் மூலம் பெறும் வசதி அறிமுகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்: இணையதளம் மூலம்  பஸ் பாஸ் பெறும் வசதி அறிமுகம்

எழுதியவர் Nivetha P
Sep 08, 2023
11:50 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கட்டணமில்லா பேருந்து பயணசீட்டுகளை பயணிகள் பயன்படும் வகையில் வழங்கி வருகிறது. அதன்படி தினசரி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர்களுக்கு இலவச பயணசீட்டு, அலுவலகம் செல்வோருக்கான கட்டண சலுகை அனுமதி சீட்டு, மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் பயணம் மேற்கொள்ள கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கப்படுகிறது. இதனை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்க மற்றும் புதிய பேருந்து பாஸ்களை பெறவும் நீண்ட வரிசையில் பேருந்து பணிமனைகள் அல்லது பேருந்து நிலையங்களில் காத்திருந்து பெறவேண்டிய கடினமான நிலை உள்ளது.

இணையம் 

இ-சேவை மூலம் கட்டணமில்லா பயணச்சீட்டு 

இந்நிலையில், பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு தற்போது இந்த கட்டணமில்லா மற்றும் சலுகை பயணசீட்டுகளை இணையதளம் மூலம் வசதியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று(செப்.,7)துவக்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த வசதி துவக்கப்பட்ட நிலையில், இதன் முதற்கட்டமாக மாநகர போக்குவரத்து கழகத்தில் இந்த வசதியானது செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இனி, கட்டணமில்லா பயணசீட்டுகளை பெற விரும்பும் தகுதியுடையோர் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது tn.e.sevai இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான சீட்டினை பெற்றுக்கொள்ளலாம். பிறகு அதற்கான குறுஞ்செய்தி கைபேசிக்கு வந்த பின்னர் அட்டையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.