
தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தேஜ் புயல் வலுப்பெற்றது: இன்றைய வானிலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(அக் 21) வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நேற்று அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மணடலம் இன்று 'தேஜ்' புயலாக வலுப்பெற்று தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவுகிறது.
ஜெவ்க்
தமிழகத்திற்கான வானிலை முன்னறிவிப்பு
மேற்கூறிய வானிலை மாற்றங்கள் காரணமாக,
அக்டோபர் 21 மற்றும் அக்டோபர் 22
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நெல்லை, கன்னியாகுமாரி
அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 24
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
அக்டோபர் 25 முதல் அக்டோபர் 27 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.