ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்தது சூரத் நீதிமன்றம்
அவதூறு வழக்கில் தனக்கு வழங்கப்பட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை தற்போது சூரத் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மோடியின் குடும்பப்பெயர் பற்றி பேசியதற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதனால் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கடந்த மாதம் சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை சூரத் நீதிமன்றம் இன்று(ஏப்-20) நிராகரித்துள்ளது. ஆகவே, ராகுல் காந்தியால் அவரது எம்பி பதிவியை இனி திரும்ப பெற முடியாது